Home

மேலாங்கோடு அக்கா செண்பகவல்லியம்மன் , தங்கை நீலாதேவி என்ற இசக்கியம்மன்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் தனது மகள்களை படை தளபதி பத்மநாபன் விரும்பியதை கேட்டு, அரண்மனைக்கு கோட்டைச்சுவர் கிழக்கு மேற்கு பக்கம் உள்ள கிணற்றில் மகள்களை தள்ளி கொன்று விடுகிறார்.

தனது தந்தையால் மரணம் எய்திய அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கோட்டையை சுற்றி ஆதாளி போட்டு, வருவோரை, போவோரை அடித்து பலி வாங்கினர். பத்மநாபனை, நீலா கொன்று குடலை உருவி மாலையாக போட்டு ஆரவாரம் செய்தாள். பத்மநாபனை சார்ந்தவர்களும் கோட்டையை சுற்றியிருந்த குடிமக்களும் நோய்வாய்ப்பட்டனர்

சிலர் அகால மரணம் அடைந்தனர். இதையறிந்த மகாராஜா மலையாள நம்பூதரிகளை வரவழைத்து சோளி போட்டு பிரசன்னம் பார்க்கையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என தெரிந்தது அவர்களை சாந்தப்படுத்த. நல்ல மந்திரவாதியை வைத்து பலி கொடுத்து படையல் பூஜை செய்தார்கள் .

மலையாள மாந்திரீகர்கள் மூன்று பேரை வரவழைத்த மகாராஜா, கோட்டைக்கு கிழக்கு பக்கம் மண்ணால் இரண்டு பெண்கள் உருவம் பிடித்து வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, ஒரு கோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாய் படைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூஜை செய்தனர். அதன் பிறகே அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் சாந்தமாகினர்.

மேலாங்கோடு ஊரில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் இருவரும் அக்கா, தங்கையாக இருந்தாலும் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். அக்கா செண்பகம் கோயிலில் பலிகள் கிடையாது. சைவ படைப்பு. தங்கை நீலாதேவி கோயிலில் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்காவுக்கு, இரண்டாவது பூஜை தங்கைக்கு. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அக்கா கோயிலான செண்பகவல்லியம்மன் கோயிலில் கொடைவிழா நடைபெறுகிறது. தங்கை கோயிலான நீலாதேவி என்ற இசக்கியம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது.

தெய்வ புராணம்

முக்கிய விரதங்கள் 

ஹோமம்

வாஸ்து

Amenities

By appointment only
Debit & Credit Cards accepted

Send a Message

An email will be sent to the owner

Areas Covered

Thoothukudi

Opening Hours

Sunday

-

Monday

-

Tuesday

-

Wednesday

-

Thursday

-

Friday

-

Saturday

-